By February 21, 20200 CommentsReport

காதலால் விழுந்த தர்ஷன் ரசிகர்களால் எழுந்தார்! .

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது இடம் பிடித்தது தர்ஷனைவிட அந்நிகழ்ச்சியைப் பார்த்த ரசிகர்களுக்கே மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தது. தர்ஷனின் தோல்வியை தங்களுடைய தோல்வியாகவே பார்த்து அந்தத் தொலைக்காட்சிச் சேனலைத் திட்டித்தீர்த்தனர். அதேசமயம், கமல்ஹாசன் தர்ஷனுக்குக் கொடுத்த பட வாய்ப்பு ஓரளவுக்கு திருப்தியைக் கொடுத்தது. வெளியே வந்ததும், பல படங்களுக்காக கதை கேட்டுகொண்டிருப்பதாக தர்ஷன் சோஷியல் மீடியாவில் அப்டேட் செய்தது ரசிகர்களுக்கு மேலும் திருப்தியைக் கொடுத்தது. ஆனால், தர்ஷனின் காதலியான சனம் ஷெட்டி, ‘இவர் என்னை ஏமாற்றிவிட்டார்’ என்று போலீஸ் ஸ்டேஷன் வாசல் ஏறியதும், அதற்காக தர்ஷன் பிரஸ் மீட் வைத்து விளக்கங்கள் கொடுத்ததும், தர்ஷன் வாழ்வில் மீண்டுமொரு பேரிடி விழுந்ததாகக் கருதப்பட்டது. இதனால் மனமுடைந்த தர்ஷன், சோஷியல் மீடியாவில் தனது இயக்கத்தைக் குறைத்துக்கொண்டது ஏற்படுத்திய பாதிப்பினை ‘மீண்டு வா தர்ஷா’ என ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் ஏற்படுத்திய டிரெண்டிங்கின் மூலம் தெரிந்தது.

ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் சோஷியல் மீடியாவுக்கு வந்திருக்கும் தர்ஷன், தனது தரப்பு விளக்கத்தையும் ரசிகர்களுக்கான நன்றியையும் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து தர்ஷன் வெளியிட்டுள்ள போஸ்டில் “ எந்த காரணத்தால் ஒரு உறவு முறிந்தாலும், அது அந்த இருவருக்குள் இருக்கும் விஷயம். ஒருவரோ அல்லது இருவருமோ மகிழ்ச்சியாக இல்லையெனில், வெவ்வேறு பாதைகளைத் தீர்மானிப்பது தான் நல்லது. மகிழ்ச்சியைக் கொடுக்காத உறவில், தொடர்ந்து இருப்பது சரியான ஒன்றல்ல. அவருக்கு என்னுடைய அதிகபட்சமான மரியாதையைக் கொடுத்தேன். ஆனால், எல்லாமே கையை மீறிச் சென்று ரியாலிட்டியை அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியாமல், என்னை அழிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படத் தொடங்கினர். அதில் எதுவுமே உண்மையல்ல எனும்போதும் என்னுடைய இமேஜ் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டது. நான் இதன்மூலம் மிகவும் காயப்பட்டேன். இதனால் சோஷியல் மீடியாவிலிருந்து வெளியேறினேன். இதுபோன்ற பின்னடைவுகள் ஏற்படும் என்று எனக்குத் தெரியும். தெரிந்தது. எனவே, முன்பைவிட தீவிரமாக எனது தொழிலில் கவனம் செலுத்தவேண்டும் என்ற முடிவுடன் மீண்டும் வந்திருக்கிறேன். இந்தப் பிரச்சினையில் எனக்கு ஆதரவாக இருந்து, நான் மீண்டு வருவதற்கு உதவியவர்களுக்கு என் வாழ்நாள் முழுவதும் நான் நன்றியுடன் இருப்பேன்” என்று கூறியிருக்கிறார்.

கிட்டத்தட்ட இன்ஸ்டாகிராமில் மட்டும் எட்டு லட்சம் பேர் பின்தொடரும் தர்ஷனுக்கு, சோஷியல் மீடியா வேல்யூ அதிகம். அதிலும், ‘எங்க வீட்டுப் பிள்ளை’ என பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் முத்திரை குத்தப்பட்ட பிள்ளை காதலால் கீழே விழும்போது விட்டுவிடுவோமா என்று தர்ஷனுக்கு மேலும் ஊக்கமளித்து வருகின்றனர் ரசிகர்கள்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது இடம் பிடித்தது தர்ஷனைவிட அந்நிகழ்ச்சியைப் பார்த்த ரசிகர்களுக்கே மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தது. தர்ஷனின் தோல்வியை தங்களுடைய தோல்வியாகவே பார்த்து அந்தத் தொலைக்காட்சிச் சேனலைத் திட்டித்தீர்த்தனர். அதேசமயம், கமல்ஹாசன் தர்ஷனுக்குக் கொடுத்த பட வாய்ப்பு ஓரளவுக்கு திருப்தியைக் கொடுத்தது. வெளியே வந்ததும், பல படங்களுக்காக கதை கேட்டுகொண்டிருப்பதாக தர்ஷன் சோஷியல் மீடியாவில் அப்டேட் செய்தது ரசிகர்களுக்கு மேலும் திருப்தியைக் கொடுத்தது. ஆனால், தர்ஷனின் காதலியான சனம் ஷெட்டி, ‘இவர் என்னை ஏமாற்றிவிட்டார்’ என்று போலீஸ் ஸ்டேஷன் வாசல் ஏறியதும், அதற்காக தர்ஷன் பிரஸ் மீட் வைத்து விளக்கங்கள் கொடுத்ததும், தர்ஷன் வாழ்வில் மீண்டுமொரு பேரிடி விழுந்ததாகக் கருதப்பட்டது. இதனால் மனமுடைந்த தர்ஷன், சோஷியல் மீடியாவில் தனது இயக்கத்தைக் குறைத்துக்கொண்டது ஏற்படுத்திய பாதிப்பினை ‘மீண்டு வா தர்ஷா’ என ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் ஏற்படுத்திய டிரெண்டிங்கின் மூலம் தெரிந்தது.

ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் சோஷியல் மீடியாவுக்கு வந்திருக்கும் தர்ஷன், தனது தரப்பு விளக்கத்தையும் ரசிகர்களுக்கான நன்றியையும் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து தர்ஷன் வெளியிட்டுள்ள போஸ்டில் “ எந்த காரணத்தால் ஒரு உறவு முறிந்தாலும், அது அந்த இருவருக்குள் இருக்கும் விஷயம். ஒருவரோ அல்லது இருவருமோ மகிழ்ச்சியாக இல்லையெனில், வெவ்வேறு பாதைகளைத் தீர்மானிப்பது தான் நல்லது. மகிழ்ச்சியைக் கொடுக்காத உறவில், தொடர்ந்து இருப்பது சரியான ஒன்றல்ல. அவருக்கு என்னுடைய அதிகபட்சமான மரியாதையைக் கொடுத்தேன். ஆனால், எல்லாமே கையை மீறிச் சென்று ரியாலிட்டியை அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியாமல், என்னை அழிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படத் தொடங்கினர். அதில் எதுவுமே உண்மையல்ல எனும்போதும் என்னுடைய இமேஜ் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டது. நான் இதன்மூலம் மிகவும் காயப்பட்டேன். இதனால் சோஷியல் மீடியாவிலிருந்து வெளியேறினேன். இதுபோன்ற பின்னடைவுகள் ஏற்படும் என்று எனக்குத் தெரியும். தெரிந்தது. எனவே, முன்பைவிட தீவிரமாக எனது தொழிலில் கவனம் செலுத்தவேண்டும் என்ற முடிவுடன் மீண்டும் வந்திருக்கிறேன். இந்தப் பிரச்சினையில் எனக்கு ஆதரவாக இருந்து, நான் மீண்டு வருவதற்கு உதவியவர்களுக்கு என் வாழ்நாள் முழுவதும் நான் நன்றியுடன் இருப்பேன்” என்று கூறியிருக்கிறார்.

கிட்டத்தட்ட இன்ஸ்டாகிராமில் மட்டும் எட்டு லட்சம் பேர் பின்தொடரும் தர்ஷனுக்கு, சோஷியல் மீடியா வேல்யூ அதிகம். அதிலும், ‘எங்க வீட்டுப் பிள்ளை’ என பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் முத்திரை குத்தப்பட்ட பிள்ளை காதலால் கீழே விழும்போது விட்டுவிடுவோமா என்று தர்ஷனுக்கு மேலும் ஊக்கமளித்து வருகின்றனர் ரசிகர்கள்.


Post a Comment

CAPTCHA
Refresh

*