By February 28, 20200 CommentsReport

அசுரகுரு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..

ராஜ்தீப் இயக்கத்தில் விக்ரம்பிரபு, மகிமா, யோகிபாபு நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அசுரகுரு’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அசுரகுரு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
அசுரகுரு படத்தில் விக்ரம் பிரபு – மகிமா
விக்ரம் பிரபு நடிப்பில் தற்போது ‘வானம் கொட்டட்டும்’ திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை அடுத்து அவரது நடிப்பில் ‘அசுரகுரு’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் ராஜ்தீப் இயக்கவுள்ளார். இவர் இயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவியாளராக பணிபுரிந்தவர்.

இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக மகிமா நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, ஜெகன், முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அசுரகுரு படத்தின் ரிலீஸ் தேதி

இந்நிலையில், இப்படத்தை மார்ச் 13ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.


Post a Comment

CAPTCHA
Refresh

*