தளபதி விஜய்யின் அன்ஸீன் செல்பி புகைப்படம்! எப்போது எடுக்கப்பட்டது தெரியுமா?

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.

 

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. 

 

இதனிடையே பீஸ்ட் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் செட் அமைத்து நடந்து வந்தது, இதில் நடிகை பூஜா ஹெக்டேவும் கலந்து கொண்டார்.

 

இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

 

அதில் ரசிகர்கள் சிலர் தளபதி விஜய்யுடன் செல்பி எடுத்துக்கொண்டு உள்ளனர். இந்த அன்ஸீன் தளபதி விஜய்யின் செல்பி புகைப்படம் ரசிகர்களிடையே பரவி வருகிறது.


Posted in: CINEMA


Post a Comment

CAPTCHA
Refresh

*