By July 11, 20210 CommentsReport

இயக்குனர் மிஷ்கின் இயக்கும் அடுத்தப்படத்தில் இவர் தான் ஹீரோவா – முதல் முறையாக இணையும் கூட்டணி

சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ என பல வெற்றி படங்களை இயக்கியவர் மிஷ்கின்.

 

தற்போது பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

 

இந்நிலையில், இயக்குனர் மிஷ்கின் அடுத்ததாக இயக்க உள்ள படத்தில் நடிகர் அதர்வா நாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டணி உறுதியானால், அவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றும் முதல் படமாக இது அமையும்.

 

தற்போது நடிகர் அதர்வா கைவசம் குருதி ஆட்டம், அட்ரஸ், தள்ளிப்போகாதே போன்ற படங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Posted in: CINEMA


Post a Comment

CAPTCHA
Refresh

*