By July 11, 20210 CommentsReport

பரிசுடன் படப்பிடிப்பை முடித்த சிம்பு – கடைசி நாளில் நடந்த சூப்பர் விஷயம்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்‌ஷன் நடித்துள்ளார்.

 

மேலும் எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, டேனியல் போப், மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

 

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நேற்று முடிந்து விட்டது.

 

கடைசி நாளில் படக்குழுவினர் அனைவருக்கும் நடிகர் சிம்பு வாட்ச் பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார்.

 

மேலும் இப்படத்தின் டிரைலர் வருகிற ஜூலை 21ஆம் தேதி பக்ரீத் பண்டிகை நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Posted in: CINEMA


Post a Comment

CAPTCHA
Refresh

*