By July 11, 20210 CommentsReport

விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக் – யார் விக்ரம்? யார் வேதா? என்று தெரியுமா

புஷ்கர், காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியான திரைப்படம் விக்ரம் வேதா.

 

ப்ளாக்பஸ்டர் ஹிட்டான இப்படம் இந்தியில் ரீமேக்காக இருப்பதாக ஏற்கனவே அறிவிப்புகள் வெளியானது. புஷ்கர், காயத்ரி இருவருமே இயக்க ஒப்பந்தமானார்கள்.

 

விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிப்பதற்குப் பல்வேறு முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

 

நீண்ட மாதங்களாக நடைபெற்றுவந்த பேச்சுவார்த்தை முடிந்து, தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆம், மாதவன் நடித்த விக்ரம் கதாபாத்திரத்தில் சைப் அலி கான் மற்றும் விஜய் சேதுபதி நடித்த வேதா கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் இருவரும் நடிக்கவுள்ளனர் என அறிவித்துள்ளனர். 


Posted in: CINEMA


Post a Comment

CAPTCHA
Refresh

*