By July 12, 20210 CommentsReport

பீஸ்ட் பட ஷூட்டிங்கில் மாஸ்டர் பட பிரபலங்கள்! யார் யார் உள்ளார்கள் என பாருங்கள்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.

 

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.

 

இதனிடையே பீஸ்ட் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் செட் அமைத்து நடந்து வந்தது, இதில் நடிகை பூஜா ஹெக்டேவும் கலந்து கொண்டார்.

 

இந்நிலையில் தற்போது பீஸ்ட் பட ஷூட்டிங் ஸ்பாடில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அனிருத், க்ரிஷ் கங்காதரன், ஜெகதீஷ் உள்ளிட்டோர் உள்ளனர். 

 

மேலும் சென்னையில் நடைபெற்று வந்த பீஸ்ட் பட ஷூட்டிங்கில் இவர்கள் எல்லாம் நேற்று கலந்து கொண்டனர் என தகவல் வெளியாகியுள்ளது.


Posted in: CINEMA


Post a Comment

CAPTCHA
Refresh

*