By July 12, 20210 CommentsReport

வலிமை படத்தில் சேர்க்கப்பட்டுள்ள குக் வித் கோமாளி பிரபலத்தின் பெயர்! யார் தெரியுமா?

தல அஜித் நடிப்பில் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் வலிமை, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.

 

மேலும் கடந்த 2 வருடங்கள் காத்திருப்பிற்கு பின் தற்போது வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் சில போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.

 

ஆக்ஷன் மற்றும் பைக் ஸ்டண்ட்ஸ் காட்சிகள் நிறைந்துள்ள படமாக வலிமை நிச்சயம் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. 

 

இந்நிலையில் அந்த மோஷன் போஸ்டரின் விவரங்களில் உள்ள நட்சத்திரங்களின் பட்டியலில் குக் வித் பிரபலம் புகழின் பெயரும் உள்ளது.   

 

மேலும் புகழ் தல அஜித்தின் படத்தில் நடித்துள்ளதை அவரின் ரசிகர்கள் பலர் இணையத்தில் பெருமையாக பேசி வருகின்றனர்.


Posted in: CINEMA


Post a Comment

CAPTCHA
Refresh

*