By July 13, 20210 CommentsReport

புது படத்திற்கு பூஜை போட்ட நடிகர் சசி குமார் – ரசிகர்கள் வாழ்த்து

இயக்குநரும், நடிகருமான சசிகுமார், அறிமுக இயக்குநர் எம்.ஹேமந்த் குமார் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கிறார்.

 

டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்திற்கான பாடல் பதிவுடன் இன்று பூஜை போடப்பட்டுள்ளது.

 

பெயரிடப்படாத இந்த புதிய படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லஷ்மன் குமார் புரொடக்சன் 5வது படைப்பாக மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கிறார்.

 

இந்த தயாரிப்பு நிறுவனம் தான் தற்போது கார்த்தி நடிக்கும் சர்தார் திரைப்படத்தை தயாரித்து வருகிறது.

 

மேலும் இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள், படப்பிடிப்பு போன்ற விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.


Posted in: CINEMA


Post a Comment

CAPTCHA
Refresh

*