By July 16, 20210 CommentsReport

உறியடி விஜயகுமாரின் புதிய படம் – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

உறியடி, உறியடி 2 படங்களை எழுதி, இயக்கி, நடித்தவர் தான் விஜயகுமார். இதுமட்மின்றி சூர்யா நடிப்பில் வெளியான சூரரை போற்று படத்திற்கு வசனம் எழுதியிருந்தார்.

 

இந்நிலையில் தற்போது இவர் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியுள்ளது.

 

அறிமுக இயக்குனர் அப்பாஸ் இயக்கவிருக்கும் இத்திரைப்படத்தை ‘ரீல் குட் பிலிம்ஸ்’ சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரிக்கிறார்.

 

இப்படத்தில் விஜய் குமாருக்கு ஜோடியாக அர்ஷா எனும் நடிகை அறிமுகமாகிறார். இவர்களுடன் நடிகர்கள் சங்கர் தாஸ், அவினாஷ் , கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

 

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்று தொடங்கியுள்ள நிலையில் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு நடை பெற இருக்கின்றது.


Posted in: CINEMA


Post a Comment

CAPTCHA
Refresh

*