By July 16, 20210 CommentsReport

“அபி டெய்லர்” என்ற புதிய நெடுந்தொடர் ஒளிபரப்பு ஆரம்பம்! கலர்ஸ் தமிழின் அதிரடி

தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்று கலர்ல் தமிழ். இதில் ஒளிபரப்பாகி வரும் ஒவ்வொரு தொடர்களுக்கும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.

 

அந்த வகையில் மக்களால் அதிகம் எதிர்பார்க்கப்படுகின்ற, புதிய நெடுந்தொடர், அபி டெய்லர்.

 

இந்த புத்தம் புதிய அபி டெய்லர் சீரியலில், பூவே பூச்சூடவா தொடரின் கதாநாயகி, ரேஷ்மா மற்றும் நடிகர் மதன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.  

 

சிறிய அளவில் தொழில்நிறுவனத்தை தொடங்கி நடத்தும் பெண் தொழில்முனைவோர்களின் கதையையும், போராட்டங்களையும் உயிரோட்டமாக கொண்ட தொடர் தான் அபி டெய்லர்.

 

வரும் ஜுலை 19, திங்கள் முதல் ஆரம்பமாகின்ற இந்த புத்தம் புதிய நெடுந்தொடர், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மட்டும் ஒவ்வொரு திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 10:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

 

சுவாரஸ்யமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகும் இந்த தொடரை தவறாமல் கண்டு மகிழுங்கள். 

 


Posted in: CINEMA


Post a Comment

CAPTCHA
Refresh

*