By July 20, 20210 CommentsReport

சிவகார்த்திகேயன் டான் படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா – வெளியான சுவாரஸ்யமான செய்தி

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் டான்.

 

இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபி சக்ரவர்த்தி, இப்படத்தை இயக்குகிறார்.

 

மேலும் இப்படத்தில் சூரி, சிவாங்கி, சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

 

டான் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை நடந்த முடிந்த நிலையில், தற்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடந்து வருகிறது.

 

அடுத்த மாதம் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்து விடும் என கூறப்படுகிறது.

 

இதையடுத்து பின்னணி பணிகளை வேகமாக முடித்து, படத்தை வருகிற டிசம்பர் மாதம், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.   


Posted in: CINEMA


Post a Comment

CAPTCHA
Refresh

*