By July 20, 20210 CommentsReport

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் பிசாசு 2 படத்தில் நடிகை நமிதா

மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய பேய் படம், பிசாசு.

 

அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, பிசாசு படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகிறது.

 

இந்த படத்தையும் மிஷ்கினே இயக்குகிறார். நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி, கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.

 

இந்நிலையில், சமீபத்தில் வெளியான நவம்பர் ஸ்டோரிஸ் மற்றும் ட்ரிப்பிள்ஸ் வெப் சீரிஸ்களில் நடித்து பிரபலமான நடிகை நமீதா கிருஷ்ணமூர்த்தி பிசாசு 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம்.


Posted in: CINEMA


Post a Comment

CAPTCHA
Refresh

*