By August 31, 20210 CommentsReport

தல அஜித்தின் மங்காத்தா படத்தின் வசூல் எத்தனை கோடி தெரியுமா? இதோ

தல அஜித் நடிப்பில் இதே நாளில் 10 வருடங்களுக்கு முன்பு ரிலிஸான படம் மங்காத்தா.

 

இப்படம் அஜித் ரசிகர்கள் தாண்டி அனைத்து தரப்பு ரசிகர்களையும் மிகவும் கவர்ந்தது.

 

இந்நிலையில் மங்காத்தா படம் வெளிவந்து 10 வருடங்கள் ஆகியதை ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

 

சரி, இதன் நினைவாக நாம் மங்கத்தா படம் செய்த சாதனைகளை பார்ப்போம், மங்காத்தா ஓப்பனிங் முதல் நாள் வசூல் அஜித்தின் திரைப்பயணத்தில் பெஸ்ட் ஆக அமைந்தது.

 

அதிலும் எந்திரன் படத்திற்கு பிறகு தமிழகத்தில் முதல் நாள் அதிக வசூல் வந்தது மங்காத்தா படத்திற்கு தான். சுமார் 7 கோடி வரை முதல் நாள் வசூல் இருந்தது, இந்நிலையில் மங்காத்தா தமிழகத்தில் மட்டும் ரூ 52 கோடி வரை வசூல் செய்தது.

 

உலகம் முழுவதும் மங்காத்தா சுமார் ரூ 78 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. ரஜினிக்கு பிறகு அதிக வசூல் செய்த நடிகர் என்ற பெருமையை அந்த சமயத்தில் அஜித் பெற்றார்.


Posted in: CINEMA, Tamil


Post a Comment

CAPTCHA
Refresh

*