By September 9, 20210 CommentsReport

சங்கர், ராமச்சரன் படத்தின் தலைப்பு இதுவா.. அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் ராம்சரண், அடுத்ததாக இயக்குனர் சங்கருடன் கூட்டணி அமைத்துள்ளார்.

 

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார்.

 

மேலும் அஞ்சலி, ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

 

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் துவங்கியது. இந்நிலையில், இப்படத்திற்கு ‘விஸ்வம்பரா’ என தலைப்பு வைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்த தலைப்பு வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பு பெரிதளவில் கூடியுள்ளது.


Posted in: CINEMA


Post a Comment

CAPTCHA
Refresh

*