By September 7, 20210 CommentsReport

ருத்ர தாண்டவம் படத்தில் இணைந்த முன்னணி இசையமைப்பாளர்.. அட இவரா..

திரெளபதி படத்தின் வெற்றியை தொடர்ந்து மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ருத்ர தாண்டவம்.

 

ரிச்சர்ட் ரிஷி, நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் பிரபல இயக்குனர் கவுதம் மேனன் வில்லனாக நடித்துள்ளார்.

 

குக் வித் கோமாளி மூலம் பிரபலமான தர்ஷா குப்தா இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார்.

 

இந்நிலையில், ருத்ர தாண்டவம் படத்தின் முதல் பாடல் வருகிற செப்டம்பர் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

அம்மாடி என தொடங்கும் இப்பாடலை முன்னணி இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளார். இப்பாடலுக்கு ஜுபின் இசையமைத்துள்ளார். 


Posted in: CINEMA, Tamil


Post a Comment

CAPTCHA
Refresh

*