By September 7, 20210 CommentsReport

நடிகை ராஷி கண்ணாவிற்கு இந்த டாப் நடிகருடன் நடிப்பது தான் கனவாம்.. யாருனு தெரியுமா

அதர்வா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படம் மூலம் கதாநாயகியாக தமிழ் திரையுலகில்அறிமுகமானவர் ராஷி கன்னா.

 

இதன்பின், அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார்.

 

தற்போது நடிகை ராஷி கன்னா, நடிப்பில் அரண்மனை 3, துக்ளக் தர்பார், மேதாவி, சைதான் கா பச்சா, சர்தார் போன்ற படங்கள் உருவாகி வருகின்றன.

 

இதுதவிர தெலுங்கில் சில படங்களும், ஹிந்தியில் இரண்டு வெப் சீரிஸ் மற்றும் இரண்டு படங்கள் கைவசம் உள்ளன.

 

இந்நிலையில் திரையுலகில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வரும் நடிகை ராஷி கண்ணாவிற்கு, தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய்யுடன் இணைந்து நடிப்பது தான் கனவாம்.

 

இதுகுறித்து நடிகை ராஷி கண்ணா பேசியபோது, ” தளபதி விஜயுடன் நடிப்பதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளேன். அவர் படத்தில் நடிப்பது எனது நீண்ட நாள் கனவு ” என கூறியுள்ளாராம். 


Posted in: CINEMA, Tamil


Post a Comment

CAPTCHA
Refresh

*