By September 6, 20210 CommentsReport

ஒரே மாதத்தில் இரண்டு படங்களை வெளியிடும் ஆர்யா.. அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஆர்யா.

 

இவர் நடிப்பில் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

 

இப்படத்தை தொடர்ந்து ஆர்யா மற்றும் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள எனிமி திரைப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்தனர்.

 

அதன்படி, இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 14ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

அதே போல், அக்டோபர் மாதம் ஆயுத பூஜை விடுமுறை நாட்களில் ஆர்யாவின் அரண்மனை 3 படமும் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

 

இதன்முலம் ஒரே மாதத்தில், தனது இரண்டு படங்களை வெளியிடவுள்ளார் நடிகர் ஆர்யா.


Posted in: CINEMA, Tamil


Post a Comment

CAPTCHA
Refresh

*