By September 6, 20210 CommentsReport

அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் இந்த தேதியில் தான் ரிலீஸா! எப்போது தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த, இப்படத்தில் ரஜினியுடன் மிக பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

 

மேலும் இப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அப்படத்தின் அடுத்த அப்டேட் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

 

இந்நிலையில் தற்போது இது குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம், அண்ணாத்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகலாம் என கூறப்படுகிறது.

 

மேலும் தீபாவளி அன்று அண்ணாத்த படத்துடன் வலிமை திரைப்படமும் வெளியாக இருப்பதாகவும் பரவலாக கூறப்படுகிறது.


Posted in: CINEMA, Tamil


Post a Comment

CAPTCHA
Refresh

*