By September 15, 20210 CommentsReport

அரண்மனை 3 படம் எப்போது ரிலீஸ் தெரியுமா – வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை படத்தின் 3ஆம் பாகம் தயாராகி உள்ளது. 

 

இதில் ஹீரோவாக ஆர்யா நடிக்க, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால் என 3 பேர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.

 

மேலும் விவேக், யோகிபாபு ஆகியோர் காமெடி வேடங்களில் வருகின்றனர். இப்படத்திற்கு சத்யா இசையமைத்துள்ளார்.

 

அரண்மனை 3 படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

 

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

 

அதன்படி இப்படம் வருகிற அக்டோபர் 14ஆம் தேதி ஆயுதபூஜை பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 


Posted in: CINEMA, Tamil


Post a Comment

CAPTCHA
Refresh

*